ஒக்டோபர் 1ஆம் திகதி உலக சிறுவர் தினத்துடன் இணைந்து, குழந்தைகளின் திறமையையும் படைப்பாற்றலையும் பாராட்டி, அவர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, Giftober மாதத்துடன், குழந்தைகளுக்கு எப்போதும் சிறந்ததை வழங்கும் HNB, இந்த ஆண்டும் பல கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் சலுகைகளுடன் உலக சிறுவர்கள் தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
HNB ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய கொண்டாட்ட நிகழ்வு வெள்ளவத்தை HNB வாடிக்கையாளர் பிரிவில் HNB முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஜொனதன் அலஸ் தலைமையில் நடைபெற்றது. HNB வைப்புப் பிரிவு பிரதானி விரங்க கமகே, HNB பிராந்தியத் தலைவர் – தென்மேற்கு, மஹிந்த செனவிரத்ன மற்றும் HNB ஊழியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இம்முறை, நாடு முழுவதுமுள்ள 40 HNB வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு 4000 சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வங்கி அவர்களுடன் உலக சிறுவர் தினத்தை கொண்டாட அழைத்தது. அன்றைய தினம் கலந்து கொண்ட குழந்தைகளுக்காக பல வினோத விளையாட்டுகளும், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்கும் HNBஇன் சிந்தனைக்கு அமைய இந்த வருடமும் Giftober திட்டத்தின் மூலம் ஒவ்வொரு சிங்கிதி கணக்கு வைத்திருக்கும் சிறுவர்களுக்கும் ஜம்போ Pen Holderகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஜப்போ Till உட்பட 100,000 ரூபா வரை பரிசு வவுச்சர்கள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கிட்டியது. இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2022 முதல் 60 நாட்களுக்கு ஒவ்வொரு HNB வாடிக்கையாளர் பிரிவிலும் மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 16 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு சிறுவரும் இந்தப் பரிசுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இத்துடன் குழந்தைகளுக்கான சித்திரப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம், குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் தன்னம்பிக்கை, விளக்கக்காட்சி திறன் மற்றும் சமூக பங்களிப்பு போன்ற முக்கிய குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். எப்பொழுதும் குழந்தைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டிய பொறுப்பை புரிந்து கொண்டு, HNB வங்கி, சிறுவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.