எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயார் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று (ஒக்.16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் ரஷ்மினி விஹங்கா இதனை குறிப்பிட்டார்.
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது கணவரின் கையில் குழந்தை இருக்கின்றதை அவதானித்ததன் பின்னரே, பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.
யார் என்ன கூறினாலும் எதிர்வரும் காலங்களில் தாம் தமது குழந்தைகளுடன், வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோறும் பருப்பும் கூட சாப்பிடுவதற்கு வழி இல்லை என கூறிய அவர், குழந்தைகளுக்கு பாலை கொடுப்பதற்குக் கூட முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தார்.
இதுவரை காலம் தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராடவில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.