Date:

ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் – நாமல்

” பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டம் இன்று 16.10.2022 நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே ‘சிஸ்டம் சேன்ஞ்’க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. ‘கள்ளன்’, ‘கள்ளன்’ என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட, சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.

ராஜபக்சவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...