புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் போராட்டத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவானோரே கலந்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவிக்கின்றார்.
பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலனாய்வு பிரிவினர் கடந்த வாரம் போராட்டம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததாகவும், இந்த அறிக்கையின் பிரகாரம் இரண்டு லட்சத்துக்கும் குறைவானோரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
போராட்டத்திற்கு அச்சப்பட்டமையினால் தாம் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சப்பட்டவர்கள் சுயாதீனமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னணி அச்சம் கிடையாது எனக் கூறிய அவர், இதுவொரு சூழ்ச்சி எனவும் தெரிவித்தார்.