Date:

மருமகளுக்காக தீ குளித்த மாமியார்

 

இந்தியாவின் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவியான 88 வயதான அன்னம்,  இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகள் உடல்நலம் சீராக வேண்டி மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...