யாழில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் உயிர் கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான தனது 15வயது மகனை தாயொருவர் ‘ எனது பிள்ளை எனக்கு வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்து சுன்னாகம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றள்ளது.
தனது மகன் உயிர் கொல்லிப் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமை என காவல்துறையினருக்கு எழுத்து மூலம் கடிதம் எழுதி நேற்றையதினம் தாயார் ஒப்படைத்தார்.
இதன்பின்னர் அம்மாணவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.