உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்ற திலினி பியமாலி என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மேலும் பல செல்வந்தர்கள், அவருடைய மோசடிக்குள் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த மோசடி தொடர்பில் குறித்த செல்வந்தர்கள் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவத்துள்ளார்.
குறித்த செல்வந்தர்கள், தமக்கு ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஊழல் மோசடிக்குள் சிக்குண்டுள்ள செல்வந்தர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில், இவ்வளவு பெரிய தொகை நிதி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து கேள்வி எழும் என்ற அச்சத்தினால், அவர்கள் அந்த இழப்பை தாங்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த ஊழல் மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்






