Date:

திருமண மண்டபத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட மணமக்கள்

திருமணத்திற்கு தயாராக திருமண மண்டபத்தில் இருந்த மணமக்கள் கைது செய்யப்பட்டதுடன், மணமகளான 15 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சௌருபுர என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அங்குலான பொலிஸார் தொிவித்துள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மணப்பெண்ணுக்கு 15 வயது , மணமகனுக்கு 19 வயது . இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் காதலுக்கு சிறுமியின் பெரிய தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததால்,

சிறுமி காதலனுடன் தப்பிச் சென்று மகொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளதாகவும் இதையடுத்து உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மண்டபத்திற்குள் பொலிஸார் சென்றபோது, ​​தம்பதிகள் அங்கிருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,

இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...