Date:

மக்களே எச்சரிக்கை! ரயில்களில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்

புகையிரதங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார் .

இதேவேளை, ஸ்தம்பிதமடைந்திருந்த வடக்கு ரயில்வே சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற உத்தரா தேவி விரைவு ரயில் நேற்று தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக நேற்று முதல் அனுராதபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்த ஒடிசி விசேட புகையிரதத்தை மஹவ பகுதியில் புகையிரத அதிகாரிகள் நிறுத்த வேண்டியிருந்தது.

அதன்படி, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் அவர்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...