இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:
நாம் இப்போது சர்வதேசத்தில் தோற்று விட்டோம்.ஐநாவில் நேற்று நடைபெற்ற விடயங்கள் அனைவரும் அறிந்ததே.சீனா,கியூபா,பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளே எமக்கு ஆதரவு வழங்கியுள்ளன.இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது.மனித உரிமை மீறல்கள்,ஊழல் இப்படியான காரணங்களால் மட்டுமே சர்வதேசம் எமக்கு ஆதரவை வழங்கவில்லை.
முதலில் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கப்பட வேண்டும்.அத்துடன் தேசிய பாதுகாப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறொரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.