ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரையின் பிரகாரம், பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (கோபா) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான நியமனம் இன்று வழங்கப்படும் என அவர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கோபா மற்றும் காப் கமிட்டி தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன.






