Date:

#FamilyFirst: TikTok அதன் Family Pairing அம்சத்தின் மூலம் பாதுகாப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை மேம்படுத்துகிறது

TikTok அதன் தனித்துவமான Family Pairing அம்சத்துடன் குடும்பப் பாதுகாப்பிற்கான அதன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது பெற்றோர்கள் மற்றும் பதின்ம வயதினரை தங்களுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு கட்டமைப்புகளை வடிவமைக்க அனுமதிக்கிறது. #FamilyFirst முன்முயற்சியின் மூலம், DM அறிவிப்புகள், காட்சிகளை பார்த்தல் மற்றும் Download செய்தல் உட்பட, TikTok கணக்குகளில் பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, Family Pairing அம்சத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பெற்றோருக்குக் கற்பிப்பதை TikTok நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தளத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களின் பாதுகாப்பை கவனித்துக்கொள்வதற்கும் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கும் TikTok இன் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக இது கருதப்படுகிறது.

 Family Pairing அம்சம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கணக்குகளுடன் அவர்களின் TikTok கணக்குகளை இணைக்கவும் அதனை நிர்வகிக்கவும் அனுமதி அளிப்பதுடன், பெற்றோரின் கவனமும் பின்வரும் அம்சங்களில் ஈர்க்கப்படுகிறது.

 Screen Time Management, 40 முதல் 120 நிமிடங்கள் வரை தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன், தங்கள் பிள்ளை TikTok இல் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர்களுக்கு முடியும்.

 Restricted Mode மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்குப் பொருத்தமற்றதாகக் கருதும் சில உள்ளடக்கத்தையும் தடுக்கலாம். Family Pairing அம்சம் முடக்கப்பட்டிருந்தாலும் கூட, Appஇன் Digital Wellbeing controls மூலம் தங்கள் குழந்தைகளின் Screen Time Management மற்றும் Restricted Mode அமைக்க பெற்றோர்கள் உதவலாம்.

 Direct Messages ஒத்துழைப்புடன், பெற்றோர்கள் தங்கள் TikTok App மூலம் தங்கள் குழந்தையின் TikTok பயன்பாட்டில் direct message தேர்வை முழுமையாக கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியும். TikTok ஏற்கனவே பயனர் பாதுகாப்புடன் செய்தி அனுப்புவதற்கான பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அங்கீகரிக்கப்பட்ட பின்தொடர்பவர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்ப முடியும் மற்றும் செய்தி அனுப்பும் போது படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப TikTok அனுமதிக்காது. மேலும், TikTok 16 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களுக்கான நேரடி செய்திகளை தானாகவே இடைநிறுத்துகிறது.

 Manage privacy and security settings அமைப்புகளை நிர்வகித்தல் மூலம், தங்கள் குழந்தைகளின் வீடியோக்களை Like செய்தல் அல்லது கருத்து தெரிவிக்கலாம் என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க முடிவதுடன், அவர்களது கணக்கு தனிப்பட்ட அல்லது பொது மக்களுக்குத் திறந்ததா அல்லது மற்றவர்களுக்கு தங்கள் கணக்கைப் பரிந்துரைக்கலாமா என்பதை அவர்கள் தீர்மானிக்கலாம்.

TikTok இலங்கையின் மிகவும் பிரபலமான நபர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள் குறிப்பாக 13 மற்றும் 19 வயதிற்கு இடைப்பட்ட சிலருடன் கூட்டு சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இளம் பாவனையாளர்கள் மீது கவனம் செலுத்துவது, குடும்பப் பாதுகாப்பு தொடர்பான TikTok இன் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கும்.

TikTok போன்ற தளங்களை மக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்வதால், குடும்பங்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், அவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் அனைத்து வகையான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு விஷயங்களை ஒன்றாக இணைக்க அனுமதிக்கும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373