மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமால் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது.
புதூர் 5ஆம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு சம்பவதினமான இன்று பகல் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிசார் சகிதம் சென்று விசாரணைகளில் கடந்த மாதம் 27 ம் திகதி செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதணைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுவருகின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.