Date:

தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்பதியினர் சடலமாக மீட்பு – யாழில் சம்பவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது – 26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...