17 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ருபாய் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.
குறிப்பாக, சூட்சமமான முறையில் தனது பயணப்பையில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விமானத்திலேயே நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்..
கைது, செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.