HNB FINANCE PLCஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க, புகைப்படப் போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் நிதிச் சேவையை உறுதிப்படுத்தவும், அவர்களின் நினைவுகளில் வாழ்க்கையின் சிறப்பு நினைவுகளை அவர்களுக்கு வழங்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு சர்வதேச புகைப்பட தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டமைக்கான மதிப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். அந்த தருணங்களை புகைப்படம் எடுத்தவர்கள் திறந்த போட்டியின் மூலம் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றினோம்.” என தெரிவித்தார். போட்டியில் பங்கேற்க, பங்குபற்றியவர்கள் HNB FINANCE இன் Facebook மற்றும் Instagram கணக்குகள் ஊடாக உள்நுழைந்து அதன் அறிவுறுத்தல்களின்படி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டிக்கு DSLR கமரா அல்லது கையடக்கத் தொலைபேசிக் கமெராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமர்ப்பித்தது சிறப்பு என்பதுடன் இதன் மூலம் பலர் தங்களது வடிவங்களை போட்டிக்கு வழங்கும் வாய்ப்பை அளிக்கப்பட்டது.
இந்த போட்டி ஆகஸ்ட் 18, 2022 அன்று முடிவடைந்தது மற்றும் வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 19, 2022 அன்று அறிவிக்கப்பட்டனர். இதன்படி, ஆக்கப்பூர்வமான விளக்கக்காட்சிகள் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட திறமை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.