Date:

BREAKING NEWS :- மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரித்தது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று முதல் மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களுமாக காணப்பட்ட மின்வெட்டு நேரம், இன்று (செப்.27) முதல் மூன்று மணித்தியாலம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவை எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில், நாளை (செப்.28) முதல் மின்வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் வரை குறைக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வர 3 அல்லது 5 நாட்கள் செல்லும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்உற்பத்தி நிலையங்களின் பயன்பாட்டு நிலைமை குறித்து முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...