Date:

Daraz Payment Partner செயல்திறன் விருது வழங்கும் நிகழ்வில் Best All-round Growthக்காக அங்கீகரிக்கப்பட்டது HNB

இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-commerce தளமான Darazஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற வருடாந்த Daraz Payment Partner Performance Awards 2022இல், சிறந்த All- round Growth உடன் கூடிய அட்டைத் தளத்திற்கான விருதும் வங்கிக்கு வழங்கப்பட்டது. சிறந்த வங்கி பங்குதாரர்களில் தரவரிசையில் உள்ள HNB, 2021- 2022க்கான அதன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் அடிப்படைகளுக்கான கட்டண அளவு, வாங்குபவர் ஈடுபாடு மற்றும் மொத்த பரிவர்த்தனை ஆகியவற்றில் சிறந்த அனைத்து சுற்று வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

“2020ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் வாங்குதலுக்கான e-commerce தளங்களின் பயன்பாடு ஆகியவை அதிவேகமாக அதிகரித்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த புதிய சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு நாங்கள் மாற்றியமைத்துள்ளோம், மேலும் HNB வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பரிவர்த்தனை செய்ய விரும்பும் எந்த தளத்திலும் பணம் செலுத்துவதற்கு வசதியான மற்றும் நெகிழ்வான விருப்பங்கள் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். Daraz வழங்கும் இந்த விருது, எங்களது கடின உழைப்பு மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என HNB கார்ட் பிரிவு பிரதானி கௌதமி நிரஞ்சன் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், HNB கடந்த ஆண்டு அவர்களின் Payment Partner Performance விருதுகளில் Daraz மூலம் அதிகபட்ச ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் Payment Partnerஆக அங்கீகரிக்கப்பட்டது. மேலும், HNB கார்ட் உரிமையாளர்கள் Darazஇல் பல நன்மைகளை அனுபவிக்கின்றனர், HNB கிரெடிட் கார்ட்களுக்கான கவர்ச்சிகரமான தள்ளுபடிகளுடன் 24 மாதங்கள் வரையிலான வட்டியில்லா தவணை திட்டங்கள் இதில் அடங்கும். சனிக்கிழமைகளில் e-commerce தளத்தில் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பண்டிகைக் காலங்கள், Black Frida விற்பனை, 11:11 மற்றும் 12.12 போன்ற சிறப்பு நாட்களில் பாவனையாளர்களுக்கு பாரிய தள்ளுபடி சலுகைகளை வழங்க வங்கி Daraz உடன் கூட்டு சேர்ந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

மிக அண்மையில், ஏசியன் பேங்கர் சஞ்சிகை நடத்திய மதிப்புமிக்க சர்வதேச சில்லறை நிதிச் சேவைகள் விருதுகள் 2022இல் 12வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக மகுடம் சூட்டி, வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத தலைவர் என்ற நற்பெயரை HNB முத்திரைப் பதித்துக் கொண்டது.

HNB இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற வங்கிகளில் ஒன்றாகவும் உள்ளது, வங்கியாளர் சஞ்சிகையின் சிறந்த 1,000 குளோபல் வங்கிகளில் தொடர்ச்சியாக ஆறு வருடங்களாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச நிதி விருதுகள் 2021இல் சிறந்த வாடிக்கையாளர் வர்த்தகம் மற்றும் SME வங்கியாகத் தெரிவுசெய்யப்பட்டு, இலங்கையின் மிகவும் சிறந்த வங்கியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து 4 வது ஆண்டாக இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில் தரவரிசையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை...

சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கான அறிவிப்பு

சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப்...

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373