அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழிக்கறி மற்றும் மீன் விலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், கோழி மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் இதுவரை குறைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.