பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ,காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்துக்கான முன் ஏற்பாட்டுக் கூட்டம் கொழும்பு பொது நுழைக்க கேட்ப்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்,அத்திவாசியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்,அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்,கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும் பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அதனை நீக்கக் கோரியும் கையெழுத்து வேட்டையும் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.