முட்டையின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முட்டை உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முட்டையின் விலையை குறைக்குமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு வகையான காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை நீக்குமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வர்த்தக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டைகளை வழங்குவதில் தாம் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோரை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.