நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் , அவர்களில் பலர் தொழில் வாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர் என்று தகவல் வெளியேறியுள்ளதுடன் இன்னும் பலர் நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நாட்டில் தற்போது கட்டுமானத் துறையில் சிமெந்து , கம்பி மற்றும் இதர பொருள்களின் விலையேற்றம் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர் .
இந்த வருடத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 23 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரி வித்துள்ளார் .
அதேநேரம் , இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்