கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் வெள்ளிக்கிழமை ரூ.369.91 இல் இருந்து இன்று 369.93 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.