Date:

வேதனத்தை மக்களுக்காக பகிர்ந்தளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான வேதனம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை இவ்வாறு மீண்டும் வழங்கவுள்ளதாக மாத்தறை – அக்குரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு இணங்கவே தாம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 120 இலட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

இஸ்ரேலிய நிறுவனத்தின் தலைமைத் தளபதி, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்...

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக...