Date:

ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்தே கொன்ற பொலிஸார்

ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது.

இந்நிலையில்குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கலாச்சார பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அங்கு வைத்தும் பொலிஸார் தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கியுள்ளார்.

இதனால் பயந்துபோன பொலிஸார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாஷா அமினியை மருத்துவமனையில் பொலிஸார் பரிசோதித்தனர். அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...