கணவன் மீது அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை படுகொலை செய்தார் என குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் மனைவியான பெண் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
அகலவத்தை பகுதியில் அமில தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அப்பகுதியை சேர்ந்த 42 வயதான குடும்பஸ்தர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சகோதரி தனது சகோதரனை, சகோதரனின் மனைவி, மனைவியின் சிறிய தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே படுகொலை செய்தனர் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் உயிரிழந்தவரின் மனைவியான 38 வயதான சட்டத்தரணி, மனைவியின் சிறிய தந்தையான 68 வயதுடைய நபர் மற்றும் சகோதரனான 36 வயதுடைய நபர் ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் தனக்கு தானே அமிலத்தை ஊற்றிக்கொண்டார் என மூவரும் தெரிவித்துள்ளனர்.
மூவரிடமும் தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.