Date:

கொழும்புக்கு அண்மித்தாக தரித்து நிற்கும் 3 எரிபொருள் கப்பல்கள்

பணம் செலுத்த வேண்டிய நிலையில் , எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்தாக சுமார் 14 நாட்களாக நிலைகொண்டிருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

இந்த எரிபொருள் கப்பல்களுக்கு சுமார் 150 மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே மத்திய வங்கியுடன் இதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கப்பல்களுக்கு எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும், 100,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் ஏற்றிய மற்றொரு கப்பலுமே இவ்வாறு தரித்து நிற்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...