காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் கதிரியக்கப் பிரிவில் கடந்த 8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 7ம் திகதி சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 8ஆம் திகதி சிறுமியின் வயிற்றை ஸ்கான் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது வைத்தியரால் சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தெரியவந்ததும் மருத்துவர் தலைமறைவாகி உள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.