Date:

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை முடக்கிய மாணவர் கைது

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

மாணவன் ஹேக்கிங் குறித்த வழிமுறை
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐடி மாணவர்களைக் கொண்ட 5000 உறுப்பினர்களைக் கொண்ட தனியார் டெலிகிராம் குழுவில் இணையதள போர்டல் மற்றும் ஹேக்கிங் குறித்த வழிமுறைகளை மாணவர் பகிர்ந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் இணையப் போர்ட்டலை ஹேக் செய்த பின்னர் அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டெலிகிராம் குழுவிற்கு அவர் அறிவித்ததையடுத்து, அவர் புதன்கிழமை (07) தனிமைப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...