Date:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்HNB FINANCE

HNB FINANCE PLC இன் நாவலப்பிட்டி கிளையானது நாவலப்பிட்டி மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பித்தது.

இதன்போது நாவலப்பிட்டி கிளையின் அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 சமைத்த உணவுப் பொதிகள், உலர் உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.

“தொடர்ந்து பல நாட்களாக பெய்த அடைமழை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் நகரங்களை அண்டிய வீடுகளில் வசித்த சிலர் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவிலான மக்களின் வீடுகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகின. இந்நிலைமைக்கு உடனடியாகப் நடவடிக்கை எடுத்த HNB FINANCE நாவலப்பிட்டி கிளையிலுள்ள எமது முழு ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அமைப்பாக எங்களின் நோக்கம் வாழ்க்கையை மேம்படுத்துவதே ஆகும், குறிப்பாக இதுபோன்ற அணர்த்த காலங்களில் அப்பகுதி மக்களுக்கான சிறந்த பணியை நிறைவேற்றுவதில் நாங்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளோம்.” என HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே, HNB FINANCE சமூகத் திட்டங்களுக்குப் பங்களித்துள்ளது மற்றும் HNB FINANCEஇன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால இலக்கில் உறுதிபூண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...