Date:

இறக்குமதி இடைநிறுத்தம்; அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் 275,000 ஹெக்டேர் நெற்செய்கைக்காக மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் வெற்றிகரமாக செய்கை செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுகிறது மற்றும் இரண்டு அரச வங்கிகள் ஊடாக ரூபா 250 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மேலும் ரூ.300 மில்லியன் கிடைக்கும். இரண்டு அரச வங்கிகளில் இருந்து தொகையைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...