ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அறிவிப்புகளை வெளியிட்டதுடன் அனைத்து கட்சிகளையும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன , ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள், மாற்றுக்கட்சிகளின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
படங்கள் எம்.நசார்