Date:

கோதுமை மா தட்டுப்பாடு; 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பேக்கரிகள் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 13,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் மா மூடை, 20,000 ரூபா வரை கறுப்புச் சந்தை விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாத பட்சத்தில் ஒரு இறத்தல் பாண் 190 ரூபா விலையில் வழங்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...