Date:

மீண்டும் முடங்குமா நாடு ? பொது மக்கள் அவதானம்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம்  அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த  ஆகஸ்ட் மாதத்தில்  5ஆயிரத்து 80 டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 43 ஆயிரத்து 393 பேர் டெங்கு நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் மாத்திரம்   40 தசம் 8 வீதமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்   குறைந்தளவான டெங்கு நோய் தொற்றாளர்கள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டின் பல பகுதிகளில்  மழையுடனான  காலநிலை நிலவி வருவதால் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப....

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...