Date:

கோட்டாவிற்கு பாதுகாப்பு ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, நாடு திரும்புவதற்கு தேவையாக பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து  பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒகஸ்ட் மாதம்  24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...