பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிறந்து சுமார் ஒரு மாதம் மதிக்கத்தக்க சிசுவொன்றை தூக்கி வந்த ஆண் ஒருவர், அதனை கைவிட்டுச் சென்றுள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கேட்ட வாகன திருத்துமிட உரிமையாளர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு சிசுவைக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வந்த பண்டாரவளை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குழந்தையை பாலூட்டி அரவணைத்துள்ளார்.
வைத்திய பரிசோதனைகளுக்காக, குழந்தை தியத்தலாவை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை கைவிட்டுச்சென்ற சந்தேகநபரைத் தேடி, பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.