Date:

உணவகங்களில் பூனை மலம் : 8 உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

மேற்படி எட்டு உணவாக உரிமையாளர்களும் கொழும்பு அளுத்கடை மற்றும் கங்கோடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உணவக உரிமையாளர்களுக்கு தலா 82,500 ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...