நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் 02 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 685 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.