Date:

சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர், முஸ்லிம்களை நம்பவில்லை – விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம் எனக் கூறினார்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...