மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபைக்கு (CBSL) அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு உரித்தான வேலைப்பளுவற்ற (Off-peak) மற்றும் பகல் நேர (Daytime) மின்சார கட்டணங்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முதற்கட்ட யோசனைப்படி, தொழில்துறைக்கான உச்சகட்ட மின்சாரக் கட்டணம் 6.85 ரூபாவில் இருந்து 14.50 ரூபாவாகவும், பகல் நேரக் கட்டணம் 11.00ரூபாவில் இருந்து 18.50 ரூபாவாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் (JAAF) PUCSLஇன் கோரிக்கையின் பேரில் யோசனைகளை முன்வைத்தது, அங்கு PUCSLஇன் அடிப்படை யோசனையின்படி தொழில்துறைக்கான உச்சநிலை மற்றும் பகல்நேர மின் கட்டண திருத்தங்களுக்கு JAAF எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை. ஆனால், உத்தேச இறுதி கட்டண அதிகரிப்பின்படி தொழில்துறையில் 113% வேலைப்பளுவற்ற (Off-peak) மின் கட்டண உயர்வு அசாதாரணமானது மற்றும் தொழில்துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று JAAF சுட்டிக்காட்டியுள்ளது. JAAF இறுதிக் கட்டண உயர்வை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது மேலும் ஒவ்வொரு கட்டத்திலும் உத்தேச கட்டணங்கள் சுமார் 50% குறைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபைக்கு (CEB) ஏற்படும் பாரிய நட்டத்தைத் தவிர்ப்பதற்கு இந்தத் திருத்தங்கள் முக்கியமானது என்பதை தொழில்துறையினர் நன்கு அறிவார்கள்.
JAAF சுட்டிக்காட்டிய விடயங்களைக் கருத்திற் கொள்ளாமல் வேலைப்பளு அல்லாத நேரம் மற்றும் பகல்நேர கட்டண அதிகரிப்பு அங்கீகாரம்,, 12வது தொகுதிக்கு முதலில் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணங்களை விட அதிகமாகும். மேலும், ஆச்சரியப்படும் விதமாக, பகல் நேரக் கட்டணங்களுக்கான திருத்தங்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட மூன்று மடங்கு அதிகம். கீழே உள்ள அட்டவணை முந்தைய, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட பகல்நேர மற்றும் வேலைப்பளு அல்லாத நேரங்களுக்காக திருத்தப்பட்ட மின் கட்டணங்களைக் காட்டுகிறது.
Industry I2
முன்னர்
அங்கீகரிக்கப்பட்ட
அறிவிக்கப்பட்ட
பகல்நேரம்: (05:30-18:30)
11.00
18.50
29.00
வேலைப்பளுவான நேரம் (18:30-22:30)
20.50
31.50
34.50
வேலைப்பளுவற்ற நேரம் (22:30-05:30)
6.85
14.50
15.00
ஆடைத் தொழில்துறையின் தேவைகள் தொடர்பாக தொழில்துறை சார்பாக JAAF முன்வைத்த யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், உத்தேச இறுதி தொழில்துறை மின்சாரக் கட்டணங்கள் குறித்து JAAF தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.
Off-Peak கட்டணங்களின் அதிகரிப்பு Off-Peakன் நோக்கத்தையே குலைத்துவிட்டதாக JAAF வலியுறுத்துகிறது. அதாவது, Off-Peak நேரத்தில் வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை நடத்த ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இந்த நடவடிக்கையானது தொழில்துறையின் செயல்பாட்டுச் செலவைக் கூட்டிச் சேர்க்கும். இதன் விளைவாக, வேலைப்பளு இல்லாத நேரங்களில் பணியாளர்களை நியமிப்பதற்காக அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும், ஆடைத் தொழில் போன்ற ஆற்றல் மிகுந்த தொழில்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அங்கு, Off-Peak மின்சாரக் கட்டணங்களின் விரைவான அதிகரிப்பு, முழுத் தொழிற்துறையின் மின்சாரக் கட்டணங்களில் மிகவும் அசாதாரணமான விளைவை ஏற்படுத்தும், எனவே அது எதிர்காலத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு வழிவகுக்கும்.
Off-peak மற்றும் Daytime கட்டணம் வேகமாக அதிகரிப்பதால், முழுத் தொழில்துறையின் உற்பத்தி விலையும் அதிகரிக்கும், எனவே இந்த நிலைமையானது 2025ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த ஆடை ஏற்றுமதி வருவாயை 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான JAAFஇன் மூலோபாய உத்திகளை மோசமாக பாதிக்கும். ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும்.
எனவே, JAAF, PUCSLஐ, தொழில்துறையின் Off-peak மற்றும் Daytime மின்சாரக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது, அவை கடுமையாக அதிகரித்துள்ளன, மேலும் ஆரம்ப முன்மொழிவுகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகளையும் பரிசீலிக்க வேண்டும். ஆடைத் தொழில்துறையானது நாட்டின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பதால், நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களை ஆதரிப்பது மற்றும் இந்த விஷயத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.