Date:

”ஹால் சமீர” கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ”ஹால் சமீர” என அழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிரிஸ்டெபூகே சமீர சம்பத் பெர்னாண்டோ, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், அரிசி உற்பத்தியாளர்களிடமிருந்து பெருமளவிலான அரிசி தொகையை சேகரித்து அந்த பெறுமதிக்கான காசோலையை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான குறித்த சந்தேகநபர், அரிசி மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகளுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படுகின்றார்.

சந்தேகநபருடைய வீட்டை சோதனையிட்டபோது இத்தாலி மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...