Date:

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

மாலபே பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வலஸ்முல்ல-கொக்கல்லான பகுதியில் வசித்துவரும் நபரே இவ்வாறு முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி!

இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர்...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய...

மாலைத்தீவில் சிக்கிய இலங்கை படகு தொடர்பில் திடுக்கிடும் தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு...