Date:

சஜித் பிரேமதாஸ கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொணடார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கொவிட் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில், இன்று தடுப்பூசி போடப்பட்டதாகவும் தடுப்பூசி போடத் தவறினால், தான் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாகலாம், அது ஆபத்தானது என்று வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்தனர் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது தற்போதைய உடல்நிலையின் படி, அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...