சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் வேதனத்தை குறைப்பதற்கான நிலைமை இல்லை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கு திட்டம் ஒன்று காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.