உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நீட்டித்துள்ளார், எனினும் அந்த காலம் மார்ச் 25 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அதன்படி, தற்போதுள்ள விதிகளின் அடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவு செய்து, அதன் பின்னரே தேர்தலை நடத்த வேண்டும்.
அதன்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கு 341 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.