வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்று (18) காலை மோட்டார் சைக்கிள் சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து “Pregablin 150 mg” ரக 690 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.