Date:

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு – அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்

அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

அண்நிய செலாவணியை உயர்த்துதல் மற்றும் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சிக்கல்களை  நிவர்த்திப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பான பொது நிர்வாக சுற்று சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுவது உள்ளிட்ட 6 விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்மூலம், வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதற்கு, வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

மேலும், விதவை மற்றும் அனாதை ஓய்வூதியத்திற்கான பங்களிப்புகள் பெறப்பட்டு, வங்கிக் கடன் தவணைகளை செலுத்தும் வகையில் கணக்குகளை இணைக்கும் முறையான அமைப்பை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...