அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து உப வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவ மற்றும் இணை சுகாதார பீடங்களின் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெறுவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
ஏனைய பீடங்களை சேர்ந்த சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலேயே தங்கியிருந்தும், மேலும் சிலர் வீடுகளுக்குச் சென்றும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.