Date:

தங்கம் இத்தாலி வசம், ஜமைக்கா மகளிர் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் 9.80 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதில் அமெரிக்க வீரர் கேர்லி 9.84 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாமிடத்தை வென்றெடுக்க, மூன்றாமிடத்தை கனடாவின் கிராஸ்ட் அணட்ரே வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 9.89 செக்கன்களில் ஓடி முடித்தார்.

வழமையாக குறுநதூர ஓட்டப்போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஜமைக்கா நாட்டின் எந்தவொரு வீரரும் 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார் ஜமைக்கா நாட்டின் தொம்சன் ஹெரா எலைன்.

இவர் பந்தயத் தூரத்தை 10.61 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இதற்கு முன்னர் அமெரிக்க வீராங்கனை ஜொன்னர் ப்ளொனெ்ஸ் 1988ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10.62 செக்கன்களில் ஓடி முடித்தமையே சாதனையாக இருந்தது.

அத்தோடு இதில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் ஜமைக்காவே தட்டிச் சென்றமை விசேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் | அமைச்சரவை முடிவு தீர்மானம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில்...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு? | விசாரணை தேவை !

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய...