Date:

அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பதை கட்டுபடுத்துவதற்கு தீர்மானம்

அத்தியாவசியமற்ற அரசாங்க ஊழியர்களை  பணிக்கு  அழைப்பதை கட்டுப்படுத்துமாறு வெளியிடப்பட்ட  சுற்றறிக்கை ஓகஸ்ட்  24ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு  கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் அமுலாகும்  வகையில் ஒரு மாத காலத்திற்கு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய பொது சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஊழியர்கள் மாத்திரமே  அலுவலக கடமைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அலுவலகத்திற்கு உள்வாங்கப்படும் பணியாளர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் முன்னெடுக்கும்  அதிகாரம்  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவருக்கு  காணப்படுவதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...